This book is written and published by the Primary five students of Concord Primary School on November 2020. it is dedicated to all Tamil students and teachers of Concord Primary school.










கமலா ஒரு அமைதியான மாணவி. அவள் யாரிடமும் பள்ளியில் பேசி பழகமாட்டாள். அதனால், அவளுக்கு நண்பர்கள் இல்லை. இருந்தாலும், அவள் ஒரு சிறந்த மாணவியாக திகழ்ந்தாள். இது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது.







"இனிமேல்,மாலாவும் நம் வகுப்பில் ஒரு மாணவி."



ஒரு நாள் மாலா என்ற புதிய மாணவி வகுப்பிற்க்குள் வந்தாள். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. "இனிமேல், மாலாவும் நம் வகுப்பில் ஒரு மாணவி" என்று அறிவியல் ஆசிரியர் கூறினார். அதை கேட்டதும் வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் கைகளை தட்டி மாலாவை வரவேற்றார்கள்.














உடற்பயிற்சி வகுப்பின்போது, கமலா தனியாக விளையாடுவதை மாலா கவனித்தாள். திடீரென்று கமலா விழுந்து விட்டதை மாலா பார்த்தாள். கமலாவின் கால்களிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அவள் வலி தாங்காமல் கதறினாள்.














ஆனால், யாரும் கமலாவுக்கு உதவ முன்வரவில்லை. இதை பார்த்த மாலா அவளை தூக்கி அவளுக்கு உதவினாள். பின்னர், ஆசிரியர் நடந்ததைப் பார்த்து அங்கே வந்தார். மாலாவிடமிருந்து என்ன நடந்தது என்பதை அறிந்த பிறகு ஆசிரியர் அவளுக்கு உதவினார், அதன் பிறகு ஆசிரியரும் மாலாவும் கமலாவை பொது அலுவலகத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.










இருவரும் கமலாவை பொது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த ஆசிரியர் முதலுதவி அளித்து அவளுக்கு ஒரு கட்டு போட்டார். கமலா மாலாவுக்கு நன்றி தெரிவித்தாள். இடைவேளை முடிந்தவுடன் அவர்கள் இருவரும் உடற்பயிற்சி ஆசிரியருடன் வகுப்பறைக்குச் சென்றனர்.








அனைவருக்கும் வணக்கம். மலாலாவின் நல்ல செயலைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்...

"அனைவருக்கும் வணக்கம். மாலாவின் நல்ல செயலைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்..." என்று ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். அதன் பிறகு ஆசிரியர் மாலாவைப் பாராட்டினார். அன்று கமலாவுக்கு உதவி செய்ததை நினைத்து மாலா மகிழ்ச்சியடைந்தாள்.





கமலா யாரிடமும் பள்ளியில் பேசி பழகாததைக் கண்ட மாலா, தான் உதவ முடியும் என்று நம்பி ஆசிரியரிடம் இதைச் சொன்னாள். ஆசிரியர் உடனடியாக கமலாவை அழைத்து நட்பின் முக்கியத்துவத்தை அவளிடம் விளக்கினார். கமலா தான் செய்த தவற்றை உடனடியாக உணர்ந்தாள்.
- Full access to our public library
- Save favorite books
- Interact with authors


The End


- < BEGINNING
- END >
-
DOWNLOAD
-
LIKE(10)
-
COMMENT()
-
SHARE
-
SAVE
-
BUY THIS BOOK
(from $4.79+) -
BUY THIS BOOK
(from $4.79+) - DOWNLOAD
- LIKE (10)
- COMMENT ()
- SHARE
- SAVE
- Report
-
BUY
-
LIKE(10)
-
COMMENT()
-
SHARE
- Excessive Violence
- Harassment
- Offensive Pictures
- Spelling & Grammar Errors
- Unfinished
- Other Problem

COMMENTS
Click 'X' to report any negative comments. Thanks!